SELANGOR

துவான் மீ தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பள்ளி பேருந்து கட்டண மானியம் வழங்கும் நிகழ்வு

10 அக்டோபர் 2024, 5:11 AM
துவான் மீ தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பள்ளி பேருந்து கட்டண மானியம் வழங்கும் நிகழ்வு
துவான் மீ தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பள்ளி பேருந்து கட்டண மானியம் வழங்கும் நிகழ்வு
துவான் மீ தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பள்ளி பேருந்து கட்டண மானியம் வழங்கும் நிகழ்வு

ஷா ஆலம்,அக் 10: நேற்று மாலை 7 மணி அளவில் துவான் மீ தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளி பேருந்து கட்டண உதவிக்கான  சிலாங்கூர்  மாநில  அரசின் உதவி மானியம் ஜெராம் தொகுதியின்  இந்திய  சமூகத் தலைவரால் அப்பள்ளியில்  வழங்கப்பட்டது.

சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி  மாணவர்களுக்கு  மட்டும் ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த மானிய உதவி திட்டத்தில், ஒவ்வொரு மாணவருக்கும் தலா 300 வெள்ளி வழங்கப்படுகிறது.  இவ்வாண்டு  இப்பள்ளியில்  உள்ள சுமார் 43 ஏழை மாணவர்கள் இந்த உதவியை பெற்றனர்.

இந்நிகழ்வில் ஜெராம் தொகுதியின் இந்திய சமூகத் தலைவர் திரு மணிவர்ணன்,துவான் மீ தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர், அப்பகுதியை சேர்ந்த அரசு சாரா நிறுவன பிரதிநிதி மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வசதி குறைந்த மாணவர்கள் கல்வியை தொடர்வதில் பொருளாதாரச் சிக்கல் தடையாக இருக்க கூடாது என்பதற்காக மாநில அரசு இந்த பேருந்து கட்டணத் திட்டத்தை  அமுல்படுத்தி வருவதாக திரு மணிவர்ணன்  தெரிவித்தார். ஏழைகளின்  நலனில் அக்கறை காட்டும்   மாநில அரசின் பரிவுக்கு, தனது மனமார்ந்த நன்றியையும், அவர் தெரிவித்துக் கொண்டார்.

தமிழ்ப்பள்ளிகளை பிரதான இலக்காகக் கொண்ட இந்த பேருந்துக் கட்டண  உதவித் திட்டத்தை மாநில அரசு கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் அமல் படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இவ்வாண்டு இந்த உதவி திட்டத்தின் வழி  மாநிலத்தில் உள்ள 99 தமிழ்ப் பள்ளிகளில்  பயிலும் 3426 வசதி குறைந்த மாணவர்களுக்கு  10 லட்சத்து 27 ஆயிரத்து  800 வெள்ளி பகிர்ந்தளிக்க படுவதாக  மனித வளம்  மற்றும்  வறுமை ஒழிப்பு துறையின்  மாநில  ஆட்சிக்குழு உறுப்பினர்  மாண்புமிகு பாப்பா ராய்டு  கடந்த 7ம் தேதி  ஷா ஆலம்  சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளியின் மாநாட்டு மையத்தில்  அறிவித்திருந்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.