உலு லங்காட், அக். 8- உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய
மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களுக்கு எம்.பி.ஐ.எனப்படும் மந்திரி புசார் கழகம் 170,000 வெள்ளியை நன்கொடையாக வழங்கியுள்ளது.
உலு லங்காட் மாவட்டத்திலுள்ள 119 பள்ளிகளும் சிப்பாங்
மாவட்டத்தில் உள்ள 51 பள்ளிகளும் எம்.பி.ஐ. அறவாரியத்தின் வாயிலாக தலா 1,000 வெள்ளியை நன்கொடையாகப் பெற்றதாக எம்.பி.ஐ. குழுமத்தின் தலைமை செயல்முறை அதிகாரி சைபுல் யஸான் எம். யூசுப் கூறினார்.
மாணவர்களுக்கு வெகுமதியும் வழங்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். நேற்று இங்கு நடைபெற்ற இந்த நிதி வழங்கும் நிகழ்வு க்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமை தாங்கினார். கல்வி அமைச்சர் ஃபாட்லினா சீடேக் இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டார்.


