SELANGOR

சிலம்பக் கோர்வை கழகத்தின் சிலம்பப் போட்டி- சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் தொடக்கி வைத்தார்

2 அக்டோபர் 2024, 7:39 AM
சிலம்பக் கோர்வை கழகத்தின் சிலம்பப் போட்டி- சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் தொடக்கி வைத்தார்
சிலம்பக் கோர்வை கழகத்தின் சிலம்பப் போட்டி- சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் தொடக்கி வைத்தார்
சிலம்பக் கோர்வை கழகத்தின் சிலம்பப் போட்டி- சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் தொடக்கி வைத்தார்

ஷா ஆலம், அக் 2 -  சிலாங்கூர் மாநில  சிலம்பக் கோர்வை

கழகத்தின் ஏற்பாட்டில் இங்குள்ள செக்சன் 19. எம்.பி.எஸ்.ஏ. மண்டபத்தில்

நடைபெற்ற சிலம்பப் போட்டியில் கோத்தா கெமுனிங் சட்டமன்ற

உறுப்பினர் கலந்து கொண்டார்.

இப்போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய அவர்,

தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பத்தைக்

கட்டிக்காப்பதில் பெரும் பங்காற்றி வரும் சிலாங்கூர் மாநில சிலம்பக்

கோர்வை கழகத்தை தாம் பெரிதும் பாராட்டுவதாக கூறினார்.

போட்டியில்   அதிகமான  மாணவர்களும்  மாணவிகளும்  மிகவும்

ஆர்வத்தோடு பங்கேற்றதோடு பல பெற்றோர்களும் பார்வையாளர்களாக கலந்துக்கொண்டது மகிழ்ச்சியை  அளிப்பதாக அவர் தமது உரையில் தெரிவித்தார்.

தற்காப்புகலையாக இருந்தாலும்  நமது பாரம்பரிய மற்றும்  இளம்

தலைமுறையினரை நல்வழிப்படுத்துதற்கு ஒரு தளமாக  சிலம்பக் கலை

அமைந்திருப்பதோடுஇந்த விளையாட்டில் அதிகமான  மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என பிரகாஷ் வலியுறுத்தினார்.

இந்த போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் திறன், கட்டொழுங்கு, மற்றும் விளையாட்டு உணர்வை பெரிதும் பாராட்டுக்குரியது எனவும் அவர் சொன்னார்.

பதிமூன்றாவது ஆண்டாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் 5 மாவட்டங்களைக்

சேர்ந்த   265 பேர் கலந்துகொண்டனர்.

30 பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் 5 வயது முதல்  20  வயதுடைய

போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

செமினி தோட்ட தமிழ்ப்பள்ளி, ரிஞ்சிங் தமிழ்ப்பள்ளி, காஜாங் தமிழ்ப்பள்ளி,  செர்டாங் தமிழ்ப்பள்ளி , சிப்பாங் மற்றும் செத்தியா அலாம் நோர்த் ஹம்மாக் ஆகிய தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த   சிலம்பக் கோர்வை கழகத்தின் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு தங்கள் ஆட்டத் திறனை வெளிப்படுத்தினர்.

போட்டியின் ஒவ்வொரு பிரிவிலும் முதல்  மூன்று இடங்களைக் பெற்றவர்களுக்கு பரிசுகள்

வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.