SELANGOR

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் `Shopee` வணிக திட்டத்தில் பங்கேற்க தொழில்முனைவோருக்கு அழைப்பு

30 செப்டெம்பர் 2024, 7:13 AM
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் `Shopee` வணிக திட்டத்தில் பங்கேற்க தொழில்முனைவோருக்கு அழைப்பு

ஷா ஆலம், செப் 30: எதிர்வரும் 2 முதல் 3 அக்டோபர் வரை செயற்கை நுண்ணறிவு (AI)

மற்றும் `Shopee` வணிக திட்டத்தில் பங்கேற்க யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர்

தொழில்முனைவோர்களை அழைக்கிறது.

மலேசியன் டிஜிட்டல் எகனாமி கார்ப்பரேஷனுடன் (எம்.டி.இ.சி) இணைந்து இந்த

திட்டம் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் பங்கேற்க குறைவான இடங்களே உள்ளன.

இத்திட்டத்தின் மூலம் வணிகங்களுக்கு உதவுவதில் AI தொழில்நுட்பத்தின்

செயல்பாட்டை ஆராயவும், `Shopee` இல் AI தொழில்நுட்பத்தின் நன்மைகள் பற்றி

அறிந்து கொள்ளவும் ஹிஜ்ரா சிலாங்கூர் தொழில்முனைவோருக்கு வாய்ப்பு

வழங்கப்பட்டுள்ளது.

கூடுதலாகப் பங்கேற்பாளர்கள் Shopee இல் தயாரிப்பு வர்த்தகத்திற்கு உதவுவதில் AI

தொழில்நுட்பத்தின் திறனை ஆராயலாம் மற்றும் பயனுள்ள சந்தைப்படுத்தல்

முறைகளைக் கற்றுக்கொள்ளலாம் என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வு ஜோம் பயிற்சி மையம், தாமான் பூச்சோங் பிரிமாவில் நடைபெறத்

திட்டமிடப்பட்டுள்ளது. மேலும். இப்பயிற்சி ஒரு பிரபல டிஜிட்டல் மார்க்கெட்டிங்

பயிற்சியாளரான துவான் அஹ்மட் ஃபிர்தௌஸ் அல்லது பயிற்சியாளர் TAF ஆல்

நடத்தப்படும்

மேல் தகவலுக்கு 016-336 3862 (வர்ஹானா) தொடர்பு கொள்ளவும் மற்றும் பின்வரும்

இணைப்பின் மூலம் பதிவு செய்யலாம் https://forms.gle/yrAW15c45U1Baqx37.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.