ஷா ஆலம், செப். 30 - பாதுகாவலர் ஒருர்ப படுகொலை செய்யப்பட்டதற்கு
தனிப்பட்ட பகை மற்றும் கடன் விவகாரம் காரணமாக இருக்கலாம் என
சந்தேகிக்கப்படுகிறது. அந்த பாதுகாவலரின் உடல் இம்மாதம் 16ஆம் தேதி
சபாக் பெர்ணம், தாமான் பெர்த்தாமாவில் சாலையோரம் நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த காரின் பொருள் வைக்குமிடத்தில் கண்டு
பிடிக்கப்பட்டது.
அந்த பாதுகாவலரின் உடல் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு தினத்திற்குப் பிறகு
கைது செய்யப்பட்ட கொலையுண்டவரின் சகப் பணியாளரான 20 வயது
மதிக்கத்தக்க ஆடவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவ்விபரம்
தெரியவந்ததாக சபாக் பெர்ணம் மாவட்ட போலீஸ் தலைவர்
சூப்ரிண்டெண்டன் ரோபின் குஹா தாக்குர்த்தா கூறினார்.
கைதான ஆடவரிடமிருந்து மூன்று கத்திகள் மற்றும் சம்பவத்தின் போது
உடுத்தியிருந்ததாக நம்பப்டும் உடைகள் ஆகியவற்றை தாங்கள் பறிமுதல்
செய்ததாக அவர் சொன்னார்.
சுங்கை பூலோ மருத்துவமனையில் நடத்தப்பட்ட சவப் பரிசோதனையில்
அவ்வாடரின் உடலில் கத்திக் குத்தப்பட்டு கழுத்து அறுக்கப்பட்டு மற்றும்
கனமான பொருளால் உடலில் தாக்கப்பட்டதற்கான தடயங்கள் இருந்ததாக
அவர் தெரிவித்தார்.
குற்றவியல் சட்டத்தித்ன 302வது பிரிவின் கீழ் விசாரணைக்காக தடுத்து
வைக்கப்பட்டுள்ள அந்த ஆடவர் இன்று கோல சிலாங்கூர் மாஜிஸ்திரேட்
நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என அவர் குறிப்பிட்டார்.
கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி மாலை 6.04 மணியளவில் பொது
மக்களிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட பகுதியில்
சோதனை மேற்கொண்ட போலீசார் காரில் ஒன்று ஆடவரின் சடலம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதைக் கண்டனர் என்று ரோபின் முன்னதாக கூறியிருந்தார்.


