SELANGOR

பாயா ஜெராஸ் தொகுதி கே.கே.ஐ.ஏற்பாட்டிலான மருதாணி பயிற்சிப் பட்டறையில் 30 பேர் பங்கேற்பு

26 செப்டெம்பர் 2024, 9:07 AM
பாயா ஜெராஸ் தொகுதி கே.கே.ஐ.ஏற்பாட்டிலான மருதாணி பயிற்சிப் பட்டறையில் 30 பேர் பங்கேற்பு
பாயா ஜெராஸ் தொகுதி கே.கே.ஐ.ஏற்பாட்டிலான மருதாணி பயிற்சிப் பட்டறையில் 30 பேர் பங்கேற்பு

(ஆர்.ராஜா)

ஷா ஆலம், செப். 26 - பாயா ஜெராஸ் சட்டமன்றத் தொகுதி இந்திய சமூகத்

தலைவர் (கே.கே.ஐ.) ஏற்பாட்டில் நடைபெற்ற மகளிருக்கான பயிற்சிப்

பட்டறையில் 3 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இந்த நிகழ்வு பண்டார் பாரு சுங்கை பூலோ சமூக மண்டபத்தில் கடந்த

22ஆம் தேதி நடைபெற்றதாக பாயா ஜெராஸ் தொகுதி இந்திய சமூகத்

தலைவர் லிம் கியான் சோய் கூறினார்.

இல்லத்தரசிகள் பகுதி நேர தொழிலில் ஈடுபட்டு வருமானத்தை பெருக்கிக்

கொள்வதற்கு உதவும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த பயிற்சிப் பட்டறைக்கு

சுற்றுவட்டார மக்களிடமிருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்தாக அவர்

சொன்னார்.

இத்துறையில் அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு இந்த

பயிற்சி நடத்தப்பட்டது. பயிற்சியில் பங்கு கொண்ட அனைவருக்கும்

நிகழ்வின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்பட்டது என்று அவர்

குறிப்பட்டார்.

தாம் இந்திய சமூகத் தலைவராக பதவியேற்ற பிறகு நடத்திய முதல்

நிகழ்வாக இது அமைவதாக க் கூறிய அவர், இது போன்ற நிகழ்வுகளை

எதிர்காலத்தில் அதிகளவில் நடத்த தாம் திட்டமிட்டுள்ளதாகச் சொன்னார்.

இந்த நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெறுவதற்கு எல்லா

வகைகளிலும் உதவிகளை வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் தாம்

நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.