ஷா ஆலம், செப் 26: செப்டம்பர் 28 முதல் அச்சபெல்லா ஹோட்டலில் இரண்டு நாட்களுக்கு, சிலாங்கூர் குழந்தை பராமரிப்பு மைய நடத்துனர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குழந்தை வளர்ப்பு மீதான சிறப்பு பயிற்சியில் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
இந்த 16வது தொடரில் இலவசமாகப் பயிற்சி பெற 50 பராமரிப்பாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என இம்பாக் முகநூல் மூலம் அறிவித்தது.
“இந்த பாடத்திட்டத்தின் மூலம், பங்கேற்பாளர்களுக்கு தங்களையும் சுற்றுச்சூழலையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு தயாரித்தல் மற்றும் குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்ற நுட்பங்கள் கற்பிக்கப்படும்,” என தெரிவிக்கப்பட்டது.
பங்கேற்பாளர்கள் சான்றிதழைப் பெறுவது உட்பட இரண்டு நாட்களுக்கான தங்குமிடம் மற்றும் உணவு செலவு ஆகியவை முழுமையாக யாயாசான் வாரிசான் அனாக் சிலாங்கூரால் (யவாஸ்) ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
“இந்த வாய்ப்பு முதலில் வரும் 50 பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே! குழந்தை வளர்ப்பு பயிற்சியில் கல்வியை பெறவும் நம்பகமான பராமரிப்பாளராகத் திகழவும் இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்,”.
https://bit.ly/


