கிள்ளான், செப் 24: கடந்த ஆண்டு அக்டோபர் முதல் செயல்படுத்தப்பட்ட இ-லேண்ட் முறையானது மாநிலத்திற்கு நன்மை அளிப்பது. நில அலுவலகத்தில் (PDT) காத்திருக்கும் நேரத்தை 92 சதவீதம் அல்லது 30 நிமிடங்களுக்கு குறைக்கவல்லது என்றார்.
சிலாங்கூரில் உள்ள நில அலுவலக சேவை கவுண்டர்களில் கிள்ளான் மாவட்ட அலுவலகத்தில் மட்டும் சேவை கவுண்டர்களின் எண்ணிக்கை 24 லிருந்து 15 ஆகக் குறைந்தது என்று கிள்ளான் மாவட்ட அதிகாரி அம்ரி இஸ்மாயில் விளக்கினார்.
"கவுண்டரைக் குறைப்பது என்பது நாங்கள் சேவைகளைக் குறைக்கிறோம் என்று அர்த்தமல்ல. இது மின்-நில முறையை செயல்படுத்துவதன் விளைவாகும். அதுமட்டுமில்லாமல், இத்திட்டம் பணியாளர்களை மேம்படுத்தவும் உதவுகிறது.
"இதற்கு முன் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால் மின்-நில முறையால் இப்போது 30 நிமிடங்களுக்கு குறைவாக ஆகும்," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
கிள்ளான் நில அலுவலகத்தில் சுமார் 100 சமூகத் தலைவர்கள் கலந்து கொண்ட இ-லேண்ட் முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து ஓராண்டு விளக்க அமர்விற்கு பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.
இதற்கிடையில், இ-லேண்ட் முறையை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை அடையாளம் காண்பதுடன், அதிகமான குடியிருப்பாளர்களுக்கு தகவலளிக்க இந்த விளக்க அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அம்ரி கூறினார்.
கிள்ளான் நில அலுவலகத்தில் குறிப்பாக முதியோர் மற்றும் பயனர்களுக்கு நட்புடன் இருப்பதை உறுதி செய்வதற்காகவும் அவர்களின், கருத்தைக் கேட்பதற்கும் விளக்க அமர்விற்கு ஏற்பாடு செய்யப் பட்டதாக அவர் விளக்கினார்.
"இந்த முறையை நகர்ப்புற சமூகம் மட்டுமல்ல, கிராமப்புற மக்களும் அனுபவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.


