SELANGOR

ஸ்கிம் மெஸ்ர ஊசிய  எமாஸ் மற்றும் ஸ்கிம்  மெஸ்ர இன்சான் இஸ்திமேவா  விண்ணப்பங்கள் ஆண்டு முழுவதும் திறந்திருக்கும்

24 செப்டெம்பர் 2024, 8:00 AM
ஸ்கிம் மெஸ்ர ஊசிய  எமாஸ் மற்றும் ஸ்கிம்  மெஸ்ர  இன்சான் இஸ்திமேவா  விண்ணப்பங்கள் ஆண்டு முழுவதும் திறந்திருக்கும்

ஷா ஆலம், செப் 24: ஸ்கிம் மெஸ்ர ஊசிய எமாஸ் மற்றும் ஸ்கிம் மெஸ்ர இன்சான் இஸ்திமேவா ஆகியவற்றிற்கான விண்ணப்பங்களை அருகிலுள்ள தொகுதி சமூக சேவை மையத்தில் ஆண்டு முழுவதும் சமர்பிக்கலாம்.

நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் நபர்கள் உடனடியாக விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள், அவர்கள் RM150 ஷோப்பிங் வவுச்சர் மற்றும் RM500 இறப்பிற்கான இழப்பீட்டு நன்கொடையைப் பெறுவார்கள் என காஜாங் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் சோங் கூறினார்.

காஜாங் தொகுதியில் இதுவரை மொத்தம் 10,449 பயனாளிகள் இரண்டு திட்டங்களின் மூலம் பயனடைந்துள்ளனர் என்றார்.

"இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஆண்டு முழுவதும் திறந்திருக்கும். மேலும் இந்த திட்டம் முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு தொடர்ந்து உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்," என அவர் கூறினார்.

இதற்கிடையில், தனகு பகுதியில் இத்திட்டத்தின் மூலம் 5,733 பேர் பயனடைந்துள்ளனர் என ஶ்ரீ செர்டாங் சட்டமன்ற உறுப்பினர் அபாஸ் அஸ்மி கூறினார்.

"ஏற்கனவே இந்தத் திட்டத்தில் பதிவு செய்தவர்கள், இந்த ஆண்டும் தேர்வு செய்யப்பட்டிருந்தால், வவுச்சரைப் பெறலாம். ஏனெனில் வவுச்சர்களை வருடத்திற்கு ஒருமுறை பெற்று கொள்ள வேண்டும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.