ஷா ஆலம், செப் 23: உலு சிலாங்கூரில் உள்ள வர்த்தகர்கள் தங்கள் வணிகத்தை
டிஜிட்டல் மயமாக்க சிலாங்கூர் பிளாட்ஃபார்ம் தொழில் முனைவோர் மேம்பாட்டுத்
திட்டத்தில் (U-PLATS) அக்டோபர் 3ஆம் தேதி பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்.
இலவசமாக நடத்தப்படும் இந்நிகழ்வில் 30 பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு
வழங்கப்படும். இந்நிகழ்ச்சி செரெண்டா சமூக மண்டபத்தில் காலை 9.30 மணி முதல்
பிற்பகல் 2.30 மணி வரை நடைபெறவுள்ளது என உலு சிலாங்கூர் நகராண்மை கழகம்
தெரிவித்தது.
தங்கள் வணிகத்தை டிஜிட்டல் மயமாக்க விரும்பும், ஆனால் எப்படி தொடங்குவது என்று
தெரியாத வர்த்தகர்கள் இப்போது ``U-PLATS MPHS`` பங்கேற்பாளர்களாகப் பதிவு
செய்யலாம்.
திட்ட உள்ளீடுகளில் டிக்டோக் பதிவு, கூகுள் மை பிசினஸ் மற்றும் தொழில்முனைவோரின் அடிப்படை தேவைகள் ஆகியவை அடங்கும்; என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.
தொழில்முனைவோர் https://forms.gle/
30க்குள் போஸ்டரில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வது பதிவு செய்யலாம்.


