SELANGOR

ஜோப்கேர் வேலைவாய்ப்பு சந்தையில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு

20 செப்டெம்பர் 2024, 3:20 AM
ஜோப்கேர் வேலைவாய்ப்பு சந்தையில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு
ஜோப்கேர் வேலைவாய்ப்பு சந்தையில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு

ஷா ஆலம் செப் 20: நாளை மண்டபம் பெரிங்கின், தாமான் ஶ்ரீ கோம்பாக்கில் நடைபெறவிருக்கும் ஜோப்கேர் வேலைவாய்ப்பு சந்தையில் கலந்து கொள்ள பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள். இந்நிகழ்வு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் வருகையாளருக்கு 3,000க்கும் மேல் வேலை காலியிடங்கள் குறித்த முகப்பிடங்களை  திறக்க உள்ளதாக சுங்கை துவா சமூக சேவை மையம் தெரிவித்தது.

அதில் 99 ஸ்பிட்மார்ட் ,கேகே மார்ட், டோப் குளோவ், கெந்திங் மலேசியா மற்றும் தே கார்டன் ஆகிய நிறுவனங்களும் அடங்கும்.

“இத்திட்டம் வேலை தேடுபவர்களுக்கு ஆதரவளிப்பதற்கு  பொது மக்களிடையே வேலை  வாய்ப்புகளை பற்றி  விழிப்புணர்வு  ஏற்படுத்துவதற்கும்  தொடர்ச்சியான முயற்சிகளில்    ஒரு  பகுதியாகும். மேலும், குறிப்பிட்ட நாள் முழுவதும் வேலைக்கான நேர்காணல், ஆலோசனை அமர்வுகள், நிறுவனங்களின் கண்காட்சிகள், விற்பனைகள் மற்றும் இலவச சுகாதார பரிசோதனைகள் ஆகியவை இடம்பெறும்.

பணியமர்த்தல் செயல்முறையை விரைவுபடுத்துவது மற்றும் தகுதிவாய்ந்த  விண்ணப்பதாரர்களுக்கு உடனடி வேலை வாய்ப்புகளை வழங்குவதை இத்திட்டம்  நோக்கமாகக் கொண்டுள்ளது.  மக்கள் உடனடியாக  நேர்காணல்களில்  பங்கு கொண்டு, வேலை வாய்ப்புகளை ஏற்க தயாராக தேவையான அனைத்து ஆவணங்களையும் கொண்டு வர ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

ஆர்வம் உள்ளவர்கள் https://bit.ly/JOBCAREHULULANGAT2024 என்ற இணையத் தளத்தில் உள்ள விண்ணப்பாரத்தைப் பூர்த்தி செய்து தங்களைப் பதிந்து கொள்ளலாம்.

கூடுதல் தகவலுக்கு, 019-6227318 (அசிசுல்) என்ற கைப்பேசி எண் மூலம் தொடர்பு கொள்ளவும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.