ஷா ஆலம், செப் 19 : பத்து தீகா தொகுதியில் சிறுவர்களுக்கு நடத்தப்படும் முதல் ஜூனியர் பூப்பந்து B3 பட்டறை செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்கியது. இதில் 80 வீரர்கள் கலந்து கொண்டதில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
மேலும், 6 முதல் 12 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு மூன்று தொடர்களாக நடைபெறும் பயிலரங்கில் பங்கேற்க தனது தரப்பு வரவேற்கிறது என சட்டமன்ற உறுப்பினர் டேனியல் அல்-ரஷித் ஹரோன் கூறினார்.
செப்டம்பர் 1 முதல் 22 வரை (முதல் தொடர்), செப்டம்பர் 8 முதல் 29 வரை (இரண்டாவது தொடர்) மற்றும் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6 வரை (மூன்றாவது தொடர்) நடைபெறும். இந்த நடவடிக்கை 240 பங்கேற்பாளர்களை இலக்காகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“பங்கேற்பாளர்கள் பயிற்சியாளர்களுடன் இந்த அமர்வுகளில் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. மேலும், இதில் தீவிர பயிற்சி மற்றும் ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் இலவசப் பிரத்தியேக சட்டைகள் வழங்கப்படும்.
“எஃப்ஒய் பிரதர்ஸ் பூப்பந்து அகாடமியுடன் இணைந்து இத்திட்டம் இளைஞர்களுக்கு பேட்மிண்டனில் பயிற்சி அளித்து அவர்களின் திறமையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அவர்களின் திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டுவோம்” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.
https://linktr.ee/Smashchine என்ற இணைப்பின் மூலம் பதிவு செய்யலாம்.


