ஷா ஆலம், செப். 19 – இன்று முதல் வரும் சனிக்கிழமை வரை கணிக்கப்பட்டுள்ள கடல் பெருக்கு நிகழ்வைத் தொடர்ந்து கிள்ளான் மாவட்ட பேரிடர் நடவடிக்கை மையம் அதிக அலை மற்றும் மழைப் பொழிவு தொடர்பான அட்டவணையை வெளியிட்டுள்ளது.
இன்று அதிகாலை 6.47 மணிக்கு கடல்மட்டம் 5.7 மீட்டராக உயரும். மாலை 6.59 மணிக்கு அது 5.2 மீட்டரை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
நாளை காலை 7.36 மணிக்கு கடல் மட்டம் 5.2 மீட்டராகக் காணப்படும் என்றும் அந்த நேரத்தில் வானிலை நன்றாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
கடைசி நாளான சனிக்கிழமை (செப்டம்பர் 21) அன்று காலை 7.56 மணியளவில் கடல் மட்டம் 5.6 மீட்டராகவும் இரவு 8.11 மணியளவில் 5 மீட்டராகவும் இருக்கும் என்றும் நாள் முழுவதும் நல்ல வானிலை இருக்கும் என்றும் அந்த மையம் குறிப்பிட்டது.
கிள்ளான் பேரிடர் செயல்பாட்டு மையத்தை 03-3371 6700 என்ற எண்ணில் அல்லது 010-973 1963 என்ற வாட்ஸ்ஆப் எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.


