SELANGOR

இன்று தொடங்கி சனிக்கிழமை வரை கடல் பெருக்கு ஏற்படும்

18 செப்டெம்பர் 2024, 1:41 AM
இன்று தொடங்கி சனிக்கிழமை வரை கடல் பெருக்கு ஏற்படும்

ஷா ஆலம், செப். 18 - இன்று முதல் வரும் சனிக்கிழமை வரை கணிக்கப்பட்டுள்ள கடல் பெருக்கு நிகழ்வைத் தொடர்ந்து கிள்ளான் மாவட்ட பேரிடர் நடவடிக்கை மையம்  அதிக அலை மற்றும் மழைப் பொழிவு தொடர்பான அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இன்று அதிகாலை 6.08 மணிக்கு கடல் மட்ட அளவு  5.5 மீட்டராகவும் பிற்பகலில் அது 5.2 மீட்டராகவும் உயரும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியமும் உள்ளது.

நாளை அதிகாலை 6.47 மணிக்கு கடல்மட்டம்  5.7 மீட்டராக உயரும். மாலை 6.59 மணிக்கு அது  5.2 மீட்டரை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) காலை  7.36 மணிக்கு கடல் மட்டம்  5.2 மீட்டராகக் காணப்படும் என்றும் அந்த நேரத்தில் வானிலை நன்றாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கடைசி நாளான சனிக்கிழமை (செப்டம்பர் 21) அன்று காலை 7.56 மணியளவில் கடல் மட்டம் 5.6 மீட்டராகவும்  இரவு 8.11 மணியளவில்  5 மீட்டராகவும் இருக்கும் என்றும்  நாள் முழுவதும் நல்ல வானிலை இருக்கும் என்றும் அந்த மையம் குறிப்பிட்டது.

கிள்ளான் பேரிடர் செயல்பாட்டு மையத்தை 03-3371 6700 என்ற எண்ணில் அல்லது  010-973 1963  என்ற வாட்ஸ்ஆப்  எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.