SELANGOR

அந்நியப் பிரஜையான மனைவி 16 மாதக் குழந்தையுடன் தலைமறைவு- கணவர் போலீசில் புகார்

17 செப்டெம்பர் 2024, 2:44 AM
அந்நியப் பிரஜையான மனைவி 16 மாதக் குழந்தையுடன் தலைமறைவு- கணவர் போலீசில் புகார்

கோலாலம்பூர், செப். 17- அந்நிய நாட்டுப் பிரஜையான தனது மனைவி ஒரு வயது நான்கு மாதக் குழந்தையுடன் தலைமறைவாகி விட்டதாக அவரின் கணவர் போலீசில் புகார் செய்துள்ளார். 

சமூக ஊடகங்களில் கடத்தப்பட்டதாக பகிரப்பட்ட  பெண்  குழந்தையின் படத்துடன் கூடிய அறிக்கை போலீசாரின் கவனத்திற்கு வந்துள்ளதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஜிசான் வான் மாமாட் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் அந்த பெண்ணின் கணவரிடமிருந்து நேற்று முன்தினம் மாலை 4.23 மணியளவில் தாங்கள் புகாரைப் பெற்றதாக அவர் அறிக்கை ஒன்றில் சொன்னார்.

அந்நியப் பிரஜையான தன் மனைவி தனது பிள்ளையுடன் தப்பியோடி விட்டதாக அக்குழந்தையின் கணவர் போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார் என்று அவர் தெரிவித்தார்.

அவ்விருவரும் சட்டப்பூர்வ கணவன்-மனைவி என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பில் ஆருடங்களை வெளியிடுவதை தவிர்க்கும் அதே வேளையில் சம்பந்தப்பட்ட  பதிவை பதிவேற்றம் செய்யவோ பகிர்ந்து கொள்ளவோ வேண்டாம் என பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.