SELANGOR

தீபாவளி இலவச பற்றுச் சீட்டுகளுக்கு கோத்தா கெமுனிங் மக்கள் விண்ணப்பிக்கலாம்

15 செப்டெம்பர் 2024, 5:46 AM
தீபாவளி இலவச பற்றுச் சீட்டுகளுக்கு கோத்தா கெமுனிங் மக்கள் விண்ணப்பிக்கலாம்

(ஆர்.ராஜா)

ஷா ஆலம், செப். 15- தீபாவளியை முன்னிட்டு பெருநாள் கால இலவச

ஜோம் ஷோப்பிங் திட்டத்தை மாநில அரசு தொடக்கியுள்ளது. இதன்

அடிப்படையில் இத்திட்டத்தில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பினை

கோத்தா கெமுனிங் தொகுதி வசதி குறைந்த தரப்பினருக்கு

வழங்கியுள்ளது.

இந்த தீபாவளி இலவச ஷோம் ஷோப்பிங் இலவச பற்றுச்சீட்டுகளுக்கு

இம்மாதம் 17ஆம் தேதி தொடங்கி விண்ணப்பம் செய்யலாம்.

இத்தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பற்றுச் சீட்டுகள் முடியும் வரை

இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என்று தொகுதி சட்டமன்ற

உறுப்பினர் எஸ்.பிரகாஷ் கூறினார்.

மாநில அரசின் உதவித் திட்டங்களான எஸ்.எம்.யு.இ., எஸ்.எம்.ஐ.எஸ்.

மற்றும் பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வுத் திட்டத்தில் பங்கு

பெறாத 18 முதல் 59 வயதுக்குட்பட்ட தொகுதி மக்கள் இந்த

பற்றுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அவர் சொன்னார்.

இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வோர் மாதம் 3,000 வெள்ளிக்கும்

குறைவாக குடும்ப வருமானம் பெறுபவர்களாகவும் கோத்தா கெமுனிங்

தொகுதி வாக்காளர்களாகவும் இருப்பது அவசியம் எனக் கூறிய அவர், ஒரு

குடும்பத்திற்கு ஒரு பற்றுச்சீட்டு மட்டுமே வழங்கப்படும் என்றார்.

இந்த பற்றுச் சீட்டுகளைப் பெற விரும்புவோர் தொகுதி சேவை

மையத்தின் வாயிலாக இதற்கான விண்ணப்பத்தைச் செய்யலாம். மேல்

விபரங்களுக்கு 03-51314354 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.