SELANGOR

தீபாவளி இலவச பற்றுச் சீட்டுகளுக்கு பந்திங் தொகுதி மக்கள் செப். 17 முதல் விண்ணப்பிக்கலாம்

15 செப்டெம்பர் 2024, 5:14 AM
தீபாவளி இலவச பற்றுச் சீட்டுகளுக்கு பந்திங் தொகுதி மக்கள் செப். 17 முதல் விண்ணப்பிக்கலாம்

(ஆர்.ராஜா)

ஷா ஆலம், செப். 15- வரும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி

கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பந்திங்

தொகுதியில் உள்ள குறைந்த வருமானம் பெறுவோர் ஷோம் ஷோப்பிங்

பற்றுச் சீட்டுகளுக்கு வரும் செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கி

விண்ணப்பிக்கலாம்.

பெருநாளைக் கொண்டாடுவதில் குறைந்த வருமானம் பெறும் பி40

தரப்பினர் எதிர்நோக்கும் பொருளாதாரச் சிக்கலைக் குறைக்கும் நோக்கில்

அமல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் தகுதி உள்ள

விண்ணப்பதாரர்களுக்கு தலா 200 வெள்ளிக்கான இலவச பற்றுச் சீட்டு

வழங்கப்படும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வீ.பாப்பாராய்டு

கூறினார்.

இந்த இலவச பற்றுச் சீட்டிற்கு விண்ணப்பம் செய்வோர் தீபாவளியைக்

கொண்டாடுபவர்களாகவும் பந்திங் தொகுதி வாக்காளராகவும் 18 முதல் 59

வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்று மனித வளம்

மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான

அவர் சொன்னார்.

ஸ்கிம் மெஸ்ரா மற்றும் பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு

உதவித் திட்ட பயனாளிக்கு இத்திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படாது என்று

தனது பேஸ்புக் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாதம் 3,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறுவோரை இலக்காக

கொண்ட இந்த திட்டத்திற்கு வரும் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி மாலை

5.00 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்பும்படி அவர் கேட்டுக்

கொண்டார்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி-

PUSAT KHDMAT MASYARAKAT DUN BANTING (019-312096)

A13-0 Ground Floor Block A, Plaza Banting Sentral,

Jalan Wisma, 42700 Banting, Selangor.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.