ஷா ஆலம், செப் 15: எதிர்வரும் அக்டோபர் 3 ஆம் தேதி சிலாங்கூர் 1,000 டிஜிட்டல் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலவச டிஜிட்டல் தொழில்முனைவோர் நிகழ்வில் பங்கேற்க தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு போல்ரூம், ஹோட்டல் மெர்கியூ சிலாங்கூர், செலாயாங்கில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என சிலாங்கூர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரக் கழகம் (சிடேக்) தெரிவித்துள்ளது.
“இது சிலாங்கூரில் தொழில்முனைவோராக இருக்கும் உங்களுக்கான வாய்ப்பு. கோம்பாக்கில் இறுதி தொடரான சிலாங்கூர் 1,000 டிஜிட்டல் திட்டத்தில் இணைவோம்.
“200 பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும். தொழில் வல்லுநர்களிடமிருந்து இலவசமாக திறன்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.
ஆர்வமுள்ளவர்கள் https://tinyurl.com/S100DGombak என்ற இணைப்பில் உடனடியாகப் பதிவு செய்துகொள்ளலாம்


