ஷா ஆலம், செப் 14: அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப் பொருட்களை மலிவு விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா திட்டம் நாளை மேலும் ஐந்து இடங்களில் காலை 10 மணிக்குத் தொடரும்.
நாளை மஸ்ஜிட் கம்போங் புக்கிட் லஞ்சோங் வளாகம் (கோத்தா கெமுனிங்), BRP 7 புக்கிட் ராஹ்மன் புத்ரா, சுங்கை பூலோ (பாயா ஜாராஸ்), தாமான் ரஸ்னா, கிள்ளான் (பத்து தீகா), ரேசாக் மண்டபம் (எம்பிஎஸ்ஏ) சட்டமன்ற உறுப்பினரின் அலுவலகம் சூன் 17 (கோத்தா டமன்சாரா) மற்றும் அபார்மெண்ட் ஶ்ரீ பாயு பொது மண்டபம் (பண்டாமாரான்) ஆகிய இடங்களில் மலிவு விற்பனை நடைபெறும்.
சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகத்தால் (PKPS) கிட்டத்தட்ட 3000 இடங்களில் இந்த மலிவு விற்பனை நடத்தப்பட்டுள்ளது. ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயனடைந்த இச்சந்தைக்குச் சிலாங்கூர் அரசு RM40 மில்லியன் மானியத்தைச் செலவிட்டுள்ளது.
இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5
கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.
பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூல் அல்லது http://linktr.ee/myPKPS என்ற இணைப்பின் மூலம் மலிவு விற்பனை நடைபெறும் இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.


