ஷா ஆலம், செப் 14: சமூக நலத் துறையின் (ஜே.கே.எம்) கீழ் ஒப்புதல் பெறுவதற்கு வசதியாகக் குழந்தை பராமரிப்பு மையங்களுக்கான பதிவு நிபந்தனைகள் தரப்படுத்தப்பட்டு ஒருங்கிணைக்கப்படும்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நிறுவப்பட்ட ஒரு சிறப்புக் குழுவின் மூலம், சுமூகமான பதிவை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், குறிப்பாக தொழில்நுட்ப சிக்கல்கள் தொடர்பாக ஆகும் என சமூக நலன் ஆட்சிக்குழு உறுப்பினர் அன்பால் சாரி கூறினார்.
"இந்தச் சட்டத்தை அமலாக்குவதற்கான அதிகாரம் ஜே.கே.எம்க்கு உள்ளது, மாநில அரசாங்கத்தின் கீழ் இல்லை. அப்படியிருந்தும், சிலாங்கூர் இந்த குழந்தை பராமரிப்பு மையங்களின் பதிவுகளை எளிதாக்க முயற்சிக்கும் என்றார்.
"தொழில்நுட்ப முகவர்களிடமிருந்து சிறப்புக் குழுவின் மூலம் பதிவு நிபந்தனைகளை ஆய்வு செய்து, தரப்படுத்துவோம், ஒருங்கிணைப்போம்," என்று அவரை தொடர்புகொண்டபோது கூறினார்.
தொழில்முனைவோர் நிபந்தனைகளை பூர்த்தி செய்து, ஜே.கே.எம் ஆல் குறிப்பிடப்பட்ட ஆவணங்களை கொண்டிருப்பதன் மூலம் இச்செயல்முறைக்கு சுமார் ஆறு மாதக் காலம் ஆகும் என்று அவர் மேலும் விளக்கினார்.
அதே நேரத்தில், குழந்தைகளின் பாதுகாப்பிற்காகக் குழந்தை பராமரிப்பாளர்களின் பின்னணியை சரிபார்க்கவும், மனநல பரிசோதனை நடத்தவும் ஜே.கே.எம் உடன் தனது தரப்பு விவாதிக்கும் என்று அன்பால் கூறினார்.
"அங்கு சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படுவதை உறுதி செய்வதோடு, ஜேகேஎம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் பதிவுசெய்யப்பட்ட குழந்தை பராமரிப்பு மையங்களை கண்காணிக்கும்," என்று அவர் கூறினார்.


