ஷா ஆலம், செப் 12: யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் ஏற்பாடு செய்த டிக்டோக் வியாபார விளம்பர வகுப்பு, தொழில்முனைவோரின் விற்பனையை 87 சதவீதம் அதிகரித்தது.
தற்போது உள்ள 66 பங்கேற்பாளர்களில் இந்த ஆண்டு பிப்ரவரி தொடக்கத்திலிருந்து தொடச்சியாக 20 பேர் கலந்துகொண்டு குறிப்பிடத்தக்க சாதனைகளை வெளிப்படுத்தியதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ மரியா ஹம்சா கூறினார்.
"அந்த 20 பேரும் டிக்டோக் விளம்பரத்தினால் அவர்களின் விற்பனையில் 87 சதவீதம் அதிகரிப்பும் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையிலும் 82 சதவீதம் கூடியுள்ளதாக தெரிய வருகிறது.
"ஹிஜ்ரா சிலாங்கூர் ஏற்பாடு செய்துள்ள வகுப்புகளில் கலந்துகொள்ளும் தொழில்முனைவோர் தங்கள் தொழில்களை மேம்படுத்துவதில் வெற்றி அடைய முடியும் என்பதை இந்த சாதனை நிரூபிக்கிறது," என்று அவரை தொடர்பு கொண்டபோது கூறினார்.
டிக்டோக்கில் சந்தைப்படுத்தல் வகுப்பு இந்த நவம்பரில் மீண்டும் நடத்தப்படும். அதில் தொழில்முனைவோரின் தயாரிப்புகளை பிராண்டிங் செய்யும் அம்சத்தில் கவனம் செலுத்தப்படும் என்று அவர் விளக்கினார்.
அதுமட்டுமில்லமல், சிலாங்கூர் 1,000 டிஜிட்டல் திட்டத்தை ஏற்பாடு செய்வதற்காக சிலாங்கூர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரக் கழகத்திற்கு (Sidec) ஹிஜ்ரா சிலாங்கூர் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது என மரியா கூறினார்.
"இந்த ஒத்துழைப்பு தொழில்முனைவோர் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, குறிப்பாக வணிகத்தில் டிஜிட்டல் உத்திகள் பற்றிய அவர்களின் புரிதலை மேம்படுத்துவதில் ஆகும்.


