சுபாங் ஜெயா, செப் 12: சுபாங் ஜெயா மாநகராட்சி 2035 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை 40 சதவீதம் வரை குறைக்க இலக்கு வைத்துள்ளது என்று அதன் துணை மேயர் தெரிவித்தார்.
இலக்கை அடைய மரங்களை நடுதல், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவித்தல், மறுசுழற்சி மற்றும் பள்ளிகள் அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டதாக முகமட் சுல்குர்னைன் சே அலி கூறினார்.
"மோட்டார் வாகனங்களைக் குறைத்தல் மற்றும் முறையான கழிவு மேலாண்மை உள்ளிட்ட பசுமை தொழில்நுட்பத்தை சமூகம் பின்பற்றுவது முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.
இதற்கிடையில், சுபாங் ஜெயா உள்ளூர் திட்டம் 2035 பச்சை மற்றும் குறைந்த கார்பன் வளர்ச்சியின் முக்கிய மூலோபாயத்திற்கு இணங்க இந்த திட்டத்தின் அமைப்பு இருப்பதாக முகமட் சுல்குர்னைன் விளக்கினார்.
"குறைந்த கார்பன் தொடர்பான தகவல்களை வழங்குவதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கழிவு மேலாண்மை ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை வளர்ப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இது உள்ளது.
“இந்த விழிப்புணர்வை குழந்தை பருவ முதல் வீடுகளிலும், பள்ளிகளிலும் ஊக்குவிக்க வேண்டும்.


