SELANGOR

பண்டார் பொட்டானிக் வெள்ளப் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்

12 செப்டெம்பர் 2024, 8:33 AM
பண்டார் பொட்டானிக் வெள்ளப் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்

ஷா ஆலம், செப் 12: கிள்ளன், பண்டார் பொட்டானிக் குடியிருப்புவாசிகளின்

வெள்ளப்பெருக்கு பிரச்சனைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கெசாஸ் மற்றும் பூலாவ் இண்டா நெடுஞ்சாலைகள் ஒட்டிய பகுதிகளில் பொதுப்பணித் துறை (ஜேகேஆர்) வடிகால் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதே இப்பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.

ஜேகேஆர் ரோட் கேர் ஒப்பந்ததாரரால் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகள் நேற்று

துவங்கி இரண்டு வாரங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக டாக்டர் ஜி

குணராஜ் கூறினார்.

கடந்த மாதம் கிள்ளான் ஜேகேஆர் பிரதிநிதி கலந்து கொண்ட மாநகராட்சியின்

உள்கட்டமைப்பு மற்றும் பொது வசதிகள் குழு கூட்டத்தில் இந்த விஷயத்தை நான்

எழுப்பினேன்.

பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு இரண்டு வாரங்களில் முழுமையாகப் பூர்த்தி அடையும். இதன் வழி வெள்ளம் மீண்டும் ஏற்படாமல் தடுக்க முடியும்,`` என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

கடந்த சில வருடங்களாக கெசாஸ் நெடுஞ்சாலையில் திடீர் வெள்ளம்

பிரச்சனை (ஹைகோம் திசையில் இருந்து பண்டார் பொட்டானிக்கை நோக்கி செல்லும்

பாதை) ஏற்படுவதாக ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டன.

வெள்ளம் அருகிலுள்ள பல குடியிருப்புகளையும் பாதித்து பண்டார் புத்ரி,

ஜாலான் லங்காட், ஜாலான் கெபூன் மற்றும் ஜாலான் ஜோஹன் செத்தியா உள்ளிட்ட

சாலைகளில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.