ஷா ஆலம், செப் 11: ஶ்ரீ கெம்பாங்கான் தொகுதியில் விளையாட்டு வசதிகள் மற்றும் சமூக நடவடிக்கை மையங்களை புதுப்பிக்கும் நோக்கத்திற்காக சிலாங்கூர் பென்யாயாங் திட்ட (PSP) நிதி பயன்படுத்தப்பட்டது.
மாநில அரசாங்கத்தின் RM250,000 ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி ஏழு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஃபுட்சல், கூடைப்பந்து, பூப்பந்து மைதானங்கள் மற்றும் தாமான் யூனிவெர்சிட்டி இண்டா, ஶ்ரீ கெம்பாங்கானில் உள்ள உடற்பயிற்சி உபகரணங்களை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும் என்று வோங் சியூ கி கூறினார்.
"மைதானங்களைப் பழுதுபார்ப்பதுடன், வேலிகள், கூரைகள், மேசைகள், நாற்காலிகள், தொடர்புடைய பகுதிகளில் உள்ள உபகரணங்கள் மற்றும் வசதிகள் ஆகியவற்றை பழுதுபார்ப்பதும் இதில் அடங்கும்.
"சம்பந்தப்பட்ட வசதிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு இது பலனை வழங்க முடியும் என்று நம்புகிறோம்," என அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.
பொது வசதிகளின் தரத்தை மேம்படுத்தவும், புதிய உள்கட்டமைப்புகளை உருவாக்கவும் RM24 மில்லியன் ஒதுக்கப்பட்டதாக டத்தோ மந்திரி புசார் 2024 பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது தெரிவித்தார்.


