SELANGOR

பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் ஏற்பாட்டில் ஸ்ரீதீமா மண்டபம் புதுப்பிப்பு

11 செப்டெம்பர் 2024, 8:09 AM
பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் ஏற்பாட்டில் ஸ்ரீதீமா மண்டபம் புதுப்பிப்பு

(ஆர்.ராஜா)

செராஸ், செப். 11 - இந்தியர்களுக்காக  அதிகமான  திட்டங்களை  மேற்கொள்வதற்கு    ஏதுவாக பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வெய்ன் ஓங் சுங் வெய் ஏற்பாட்டில் இங்குள்ள ஸ்ரீதீமா பொது மண்டபம் புதுப்பிக்கப்பட்டது.

பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், ரத்த தான முகாம் உள்ளிட்ட சமூக நல திட்டங்களை நடத்துவதற்குரிய வாய்ப்பினை இந்த மண்டபம் வழங்கும் என்று வெய்ன் ஓங் கூறினார்.

இவ்வாண்டு தொடக்கத்தில் பொங்கல் நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டபோது  இந்த மண்டபத்தின் கூரைப்பகுதி பழுதாகியிருந்ததைக் கண்டறிந்ததாக அவர் சொன்னார்.

"பழமையான இந்த மண்டபம் தற்போது சீரமைக்கப்பட்டதன் வழி  இங்கு  நடத்தப்படும்  நிகழ்ச்சிகளில் ஏராளமானோர்  பங்கேற்றுப் பயன் பெறலாம்” என்று புதுப்பிக்கப்பட்ட மண்டபத்தை நேரில் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

பலாக்கோங் இந்தியர் சமூக தலைவர் கிறிஸ்டி, காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர் எட்வின் தாங் மற்றும் இதர பொறுப்பாளர்களும் உடன் இருந்தனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.