SELANGOR

இதுவரை மொத்தம் 1.72 டன் நகர மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன

11 செப்டெம்பர் 2024, 6:18 AM
இதுவரை மொத்தம் 1.72 டன் நகர மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன

ஷா ஆலம், செப் 11: செப்டம்பர் 1 ஆம் தேதியிலிருந்து இதுவரை மொத்தம் 1.72 டன் நகர மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் ஒரு கிலோகிராம் நகர்ப்புற மீனுக்கு RM1 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

"கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, நாங்கள் 1.72 டன் நகர மீன்களைப் பெற்றோம். இத்திட்டம் தொடங்கிய இரண்டு வாரத்திற்குள் வரவேற்பு நன்றாக உள்ளது என வேளான் ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

"இத்திட்டத்தில் ஒவ்வொரு வாரமும், சராசரியாக 60 மீனவர்கள் பங்கேற்கின்றனர், இந்த மாத இறுதியில் அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நம்புகிறோம், இது திட்டத்தின் இலக்கை அடைய உதவும்," என்று சிலாங்கூர்கினியிடம் இஷாம் அசிம் கூறினார்.

அனைத்து மீன்களும் சிறப்பு செயலாக்க மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, யானிசிஸ் பயோ-நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கால்நடை தீவனம் மற்றும் கரிம உரமாக மாற்றப்படும்.

"நகர மீன்கள் மூலம் உருவாக்கப்படும் கால்நடைத் தீவனம் மற்றும் கரிம உரம் போன்றவற்றில் நுண்ணூட்டச் சத்துக்கள் அதிக தரத்தில் உள்ளன, கூடுதலாக வணிகமயமாக்கப்படும் சாத்தியமும் உள்ளது," என்று அவர் கூறினார்.

இம்மாத இறுதிக்குள் 50 டன் மீன்களைப் பிடிக்கும் இலக்காகக் கொண்டு இத்திட்டத்தை மாநில அரசு RM50,000 ஒதுக்கீட்டில் ஏற்பாடு செய்தது

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.