SELANGOR

தீபாவளி பண்டிக்கையை முன்னிட்டு 22,000 ஜோம் ஷோப்பிங் வவுச்சர்கள் விநியோகிக்கப்படும்

11 செப்டெம்பர் 2024, 3:35 AM
தீபாவளி பண்டிக்கையை முன்னிட்டு 22,000 ஜோம் ஷோப்பிங் வவுச்சர்கள் விநியோகிக்கப்படும்

ஷா ஆலம், செப் 11: அடுத்த மாதம் வரவிருக்கும் தீபாவளி பண்டிக்கையை முன்னிட்டு

200 ரிங்கிட் மதிப்புள்ள 22,000 ஜோம் ஷோப்பிங் வவுச்சர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

56 தொகுதிகளில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட மக்களை இலக்காகக் கொண்ட

இத்திட்டத்திற்கு RM4.4 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகப் பாப்பாராய்டு கூறினார்.

“இந்த ஜோம் ஷோப்பிங் தீபாவளி திட்டம் அக்டோபர் 1ம் தேதி முதல் 27ம் தேதி வரை

மேற்கொள்ளப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பல்பொருள் அங்காடிகளில் நிர்ணயிக்கப்பட்ட தேதி மற்றும்

நேரத்திற்கு ஏற்ப வவுச்சர்களை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்குவார்கள், என்று அவரை தொடர்பு கொண்டபோது கூறினார்.

இத்திட்டம் மக்களின் சுமையைக் குறைக்கவும் பண்டிகையைக் கொண்டாடுவதற்கான

உபகரணங்களை வாங்க உதவியாக இருக்கும் என்றார் அவர்.

பொருளாதார நிலைமை மற்றும் மக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு வவுச்சர்

மதிப்பு RM100 இலிருந்து RM200 ஆக உயர்த்தப்பட்ட பின்னர் இந்த ஆண்டு வரவு

செலவுத் திட்டத்தில் 82,400 பெறுநர்கள் பயன்பெறும் வகையில் RM16.48 மில்லியன்

ஒதுக்கப்பட்டுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.