அமைப்பதற்காக சுபாங் ஜெயா தொகுதி மொத்தம் RM 48,445 ஒதுக்கீடு செய்தது.
மேலும், மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒதுக்கீட்டின் கீழ் மிகப்பெரிய நிதியும் பள்ளியின்
இரண்டாவது பாதையின் நுழைவாயிலை பெரிதாக்க பயன்படுத்தப்பட்டதாக
சட்டமன்ற உறுப்பினர் மிஷல் இங் மேய் சீ கூறினார்.
“மாணவர்கள் தங்கள் பெற்றோருக்காகக் குறிப்பாக மழை பெய்யும் போது காத்திருப்பதை
எளிதாக்குவதற்கு மேற்கூரை முக்கியமானது என்பதால், இந்த கட்டுமானத்திற்காகப்
பள்ளியிலிருந்து விண்ணப்பம் பெற்றேன்.
USJ 8 இடைநிலைப்பள்ளி மாணவர்களில் சுமார் 60 சதவீதம் பேர் B40 குடும்பங்களைச்
சேர்ந்தவர்கள் என்பதால், இந்த ஒதுக்கீட்டிற்கு நான் ஒப்புதல் அளித்தேன், என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
91 மீட்டர் நீளமும் 2.8 மீட்டர் அகலமும் கொண்ட மேற்கூரை நிறுவும் பணி ஜூலை 12 ஆம் தேதி முழுமையாக நிறைவடைந்த தாகவும் இதன் மூலம் 900 மாணவர்கள் பயன்பெற
முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மிஷல் விளக்கமளித்துள்ளார்.
இந்த மேம்பாட்டு பணிகள் மூலம் அப்பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாகவும்
வசதியாகவும் இருப்பார்கள் என்று நம்புகிறேன், என அவர் கூறினார்.


