SELANGOR

எல்மினா ரிட்ஜ் கட்டுமானப் பகுதியில் நிலச்சரிவு- இரு தொழிலாளர்கள் மரணம்

9 செப்டெம்பர் 2024, 5:27 AM
எல்மினா ரிட்ஜ் கட்டுமானப் பகுதியில் நிலச்சரிவு- இரு தொழிலாளர்கள் மரணம்

ஷா ஆலம், நவ. 9- இங்குள்ள எல்மினா ரிட்ஜ் கட்டுமானப் பகுதியில் மண் மற்றும் காங்கீரிட் கால்வாய் இடிந்து விழுந்த சம்பவத்தில் இரு கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் காலை 10.29 மணியளவில் தாங்கள் அழைப்பினை பெற்றதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்  துறையின் இயக்குநர் வான் முகமது ரசாலி வான் இஸ்மாயில் கூறினார்.

அந்த கட்டுமான பகுதியில் வடிகால் அமைக்கும் பணியில் அவ்விரு பணியாளர்களும் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட மண் மற்றும் காங்கீரிட் சுவர் சரிந்து அவர்கள் சுமார் புதையுண்டதாக அவர் சொன்னார்.

இந்த விபத்தில் சிக்கிய முதலாவது நபரின் உடல் காலை 11.12 மணிக்கு மீட்கப்பட்ட வேளையில் இரண்டாவது நபரின் சடலம் காலை 11.35 மணியளவில் வெளியே கொண்டுவரப்பட்டதாக அவர் தெரிவித்தார்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.