SELANGOR

சிலாங்கூர் மாநில பெண்களுக்கான சிலம்ப போட்டி

8 செப்டெம்பர் 2024, 7:30 AM
சிலாங்கூர் மாநில பெண்களுக்கான சிலம்ப போட்டி
சிலாங்கூர் மாநில பெண்களுக்கான சிலம்ப போட்டி

ஷா ஆலம், செப் 8: இன்று சிலாங்கூர் மாநில பெண்களுக்கான சிலம்ப போட்டி 2024 தஞ்சோங் பெசார் மண்டபம், செக்‌ஷன் 19, ஷா ஆலமில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பா ராய்டு வருகை புரிந்து தனது ஆதரவை வழங்கினார்.

மேலும், மஹாகுரு மேன்மை தகு பெரியசாமி, தேசிய தலைவர், மலேசிய சிலம்பம் சங்க மஹாகுரு சங்கத்தின் உறுப்பினர்கள், பங்கேற்பாளர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இந்த போட்டியை சிறப்பித்தனர்.

இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  இப்போட்டியில் 9 மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 375 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் 14 அணிகளாகக் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் பெண்களின் வலிமை, திறமை, உறுதி ஆகியவை நம் அனைவரையும் ஊக்கப்படுத்தி உள்ளன. அவர்களின் விடாமுயற்சி மற்றும் தைரியம் தான் வெற்றியை உண்மையில் தீர்மானிக்கிறது.

இப் போட்டி சிறப்பாக நடைபெறும் என நம்புகிறோம். போட்டி அமைப்பாளர்கள் மற்றும் இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.