SELANGOR

ரஹ்மா 5.0 ஆரோக்கிய கண்காட்சிக்குப் பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்

6 செப்டெம்பர் 2024, 9:36 AM
ரஹ்மா 5.0 ஆரோக்கிய கண்காட்சிக்குப் பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்

ஷா ஆலம், செப் 6: எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பத்து தீகா தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட ரஹ்மா 5.0 ஆரோக்கிய கண்காட்சிக்குப் பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.

இந்த நிகழ்வு ஷா ஆலம் செக்‌ஷன் 17 இல் உள்ள கெக்வா மண்டபத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என சட்டமன்ற உறுப்பினர் டேனியல் அல்-ரஷிட் ஹரோன் கூறினார். இதில் பல்வேறு சுவாரசியமான நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

"இந்நிகழ்வில் சொக்சோவின் `PeKa B40` மற்றும் சுகாதார பரிசோதனை உட்பட பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் இடம்பெறும்.

மேலும், RM20,000 வரையிலான மருத்துவ உபகரண உதவி அதாவது கண் பரிசோதனை மற்றும் மூக்கு கண்ணாடி வாங்குவதற்கு மானியமும் வழங்கப்படுகிறது," என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

மேலும், 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள் பாப் ஸ்மியர் மற்றும் மகளிர் மருத்துவ பரிசோதனைகளுக்குக் கூடுதலாக மேமோகிராம் சோதனைகளுக்கான கூப்பன்களைப் பெற வாய்ப்பு உள்ளது.

அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. வருகையாளர்கள் தங்கள் தகுதிகளை sehati.perkeso.gov.my/check மற்றும் sehati.pekab40.com.my/semakan-kelayayak மூலம் சரிபார்க்கலாம் என்று அவர் விளக்கினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.