ஷா ஆலம், செப். 6 - இவ்வாண்டு ஜனவரி முதல் ஆகஸ்டு 26ஆம் தேதி
வரை கார் நிறுத்துமிடக் கட்டணமாக அம்பாங் ஜெயா நகராண்மைக்
கழகம் 58 லட்சம் வெள்ளியை வசூலித்துள்ளது.
அந்த தொகையில் 28 லட்சம் வெள்ளி இணையம் வாயிலாகவும் மேலும
26 லட்சம் வெள்ளி பிரத்தியேக கார் நிறுத்துமிடங்களுக்கான வாடகை
மூலமாகவும் பெறப்பட்டதாக அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்
தலைவர் டாக்டர் அனி அகமது கூறினார்.
இது தவிர, குடியிருப்பாளர்களுக்கான மாதாந்திர பயணச்சீட்டின் வழி
226,000 வெள்ளியும் மாதாந்திர பயணச் சீட்டின் மூலம் 191,000 வெள்ளியும்
வசூலிக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, புக்கிட் அந்தாராபங்சா பனோராமாவில் இம்மாதம் முதல்
தேதி தொடங்கி வாகன நிறுத்துமிடத்திற்கான கட்டண முறையை
(டி.எல்.கே.) நகராண்மைக் கழகம் அமல்படுத்தியுள்ளது என்றும் அவர்
சொன்னார்.
சுமார் 2.79 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார்
நிறுத்துமிடத்தில் 70 கார்கள் வரை நிறுத்த முடியும் என்றும் முதல்
இரண்டு மணி நேரத்திற்கு 2.00 வெள்ளியும் அடுத்த ஒவ்வொரு மணி
நேரத்திற்கும் தலா 1.00 வெள்ளியும் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும்
அவர் தெரிவித்தார்.


