SELANGOR

பிடிபட்ட ஆண் முதலை, மேல் பரிசோதனைக்காக டெங்கிலுக்கு அனுப்பப்பட்டது

5 செப்டெம்பர் 2024, 7:38 AM
பிடிபட்ட ஆண் முதலை, மேல் பரிசோதனைக்காக டெங்கிலுக்கு அனுப்பப்பட்டது

ஷா ஆலம், செப் 5: நேற்றிரவு வெற்றிகரமாக பிடிபட்ட 20 கிலோ எடையுள்ள ஆண் முதலை, மேல் பரிசோதனைக்காக டெங்கில் உள்ள பாயா இண்டா வெட்லேண்ட்ஸுக்கு அனுப்பப்பட்டது.

அம்முதலை வாழ்விடத்திற்கு மாற்றப்படுவதற்கு முன்பு அது நோய்வாய்ப்படாமல் இருப்பதை உறுதி செய்வதாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சிலாங்கூர் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறையின் இயக்குனர் கூறினார்.

"ஏரி அகலமாக இருப்பதால் முதலையின் நடமாட்டத்தை கண்டறிய முதல் கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. எனவே, நேற்றிரவு அதை பிடிக்கும் வரை தனித்தனி இடங்களில் இரண்டு பொறிகள் மற்றும் மூன்று தூண்டில்களை நிறுவினோம்," என்று விளக்கினார்.

அதே நேரத்தில், வெள்ளப்பெருக்கு காரணமாக அம்முதலை அங்கு வந்திருக்கலாம் என்ற சாத்தியக்கூற்றை அவரது தரப்பு நிராகரிக்கவில்லை.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.