SELANGOR

நான்கு பிபிடிகள் 2026 ஆம் ஆண்டுக்குள் ஒருங்கிணைந்த வழிகாட்டுதலைப் பயன்படுத்தும்

4 செப்டெம்பர் 2024, 8:51 AM
நான்கு பிபிடிகள் 2026 ஆம் ஆண்டுக்குள் ஒருங்கிணைந்த வழிகாட்டுதலைப் பயன்படுத்தும்

ஷா ஆலம், செப் 4: கிள்ளான்ராயா பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள நான்கு பிபிடிகள் 2026 ஆம் ஆண்டுக்குள் ஒருங்கிணைந்த வழிகாட்டுதலைப் பயன்படுத்தும் என்று உள்ளூர் அரசாங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

கிள்ளான், பெட்டாலிங் ஜெயா, ஷா ஆலம் மற்றும் சுபாங் ஜெயா ஆகிய இடங்களில் அனைத்து சட்ட அமலாக்கங்களும் நெறிப்படுத்தப்பட்டு தரப்படுத்தப் படுவதை உறுதி செய்வதற்காக இந்த வழிகாட்டுதல்கள் வரையப்பட்டிருப்பதாக டத்தோ எங் சூயி லிம் கூறினார்.

"இந்த நான்கு நகரங்களும் முக்கியத்துவமான கிள்ளான் பள்ளத்தாக்கில் இணைக்கப்பட்டு, சிலாங்கூர் மற்றும் மலேசியாவில் ஒரு பெருநகரமாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

"எனவே நாங்கள் நிபுணத்துவம், வளங்கள், நிதி மற்றும் பலவற்றை ஒருதரப்படுத்த வேண்டும், " என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

மெட்ரோபோலிஸ் என்பது ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகரத்தைக் குறிக்கிறது. இது நிர்வாக, வணிக, வர்த்தக, தொழில்துறை மற்றும் உயர் தொழில்நுட்ப மையமாக செயல்படுகிறது.

இந்த வழிகாட்டுதல்களை நிறைவேற்றுவதற்கு கிள்ளான் ராயா பள்ளத்தாக்கு மேம்பாட்டு கவுன்சிலின் முதன்மைக் குழுவின் கீழ் சிலாங்கூர் தரநிலைப்படுத்தல் குழுக் கூட்டத்தையும் நிறுவியதாக சூயி லிம் கூறினார்.

ஒவ்வொரு பிபிடியிலும் கட்டிட சீரமைப்புத் திட்டங்கள், பொறியியல் தொழில் நுட்பக் கையேடுகள், சிறு சட்டங்கள் மற்றும் நிலையான மேம்பாடு ஆகியவை இந்த வழிகாட்டுதல்களில் இடம்பெற்றுள்ளதாக அவர் விளக்கினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.