ஷா ஆலம், செப் 4: செக்‌ஷன் 7இல் உள்ள ஏரியில் முதலையைப் பிடிக்க இரண்டு கோழி  பொறி  தூண்டில்களை சிலாங்கூர் தேசிய வனவிலங்கு பூங்கா பாதுகாப்புத் துறை அமைத்துள்ளது.

அந்த முதலை 1.5 மீட்டர் நீளம் கொண்டதாக மதிப்பிடப்பட்டு செப்பு இனமாக அடையாளம் காணப்பட்டதாக இயக்குனர் வான் முகமட் அடிப் வான் முகமட் யூசோவ் கூறினார்.

நேற்றைய 24 மணி நேர கண்காணிப்பின் பலனாக இந்த முதலையின் செயல்வழி பாதையை கண்டறிந்துள்ளோம். ஏரியின் கரையில் இருந்து சுமார் மூன்று முதல் ஐந்து மீட்டர் தொலைவில் அதன் நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டது.

"அதைத் தொடர்ந்து, இந்த முதலையைப் பிடிக்க மிதக்கும் பொறிகளை அமைத்தோம்," என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், ஏரி பகுதியை விட்டு முதலை வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக ஐந்து பக்கங்களிலும் வலைகளை நிறுவியுள்ளதாக ஷா ஆலம் மாநகராட்சியின் (எம்பிஎஸ்ஏ) மேயர் கூறினார்.

"எம்பிஎஸ்ஏ அமலாக்க உறுப்பினர்களுக்கு தகவல் வந்ததிலிருந்து ஏரியில் ரோந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அருகிலுள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

"முதலை உடனடியாக பிடிபடுவதை உறுதி செய்வதற்காக சிலாங்கூர் தேசியப் பூங்கா வனவிலங்கு பாதுகாப்புத் துறையிடன் இணைந்து தொடர்ந்து கண்காணிப்பதற்காகப் படகுகள் மற்றும் ட்ரோன் போன்ற கருவிகளை நாங்கள் பயன்படுத்துகிறோம்" என்று டத்தோ முகமட் ஃபௌசி முகமட் யாதிம் கூறினார்.

எம்பிஎஸ்ஏ நிர்வாகப் பகுதியில் முதலைகள் இருப்பது தொடர்பாக இதுவரை இரண்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. முதலில் 2019ஆம் ஆண்டு தாமான் தாசிக் ஷா ஆலமில் உள்ளதாகத் தகவல் பதிவு செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார்.