(ஆர்.ராஜா)
ஷா ஆலம், நவ. 4 - கோல சிலாங்கூர் 7வது மைலில் கடந்த வாரம்
வெள்ளிக்கிழமை வீசிய புயல் காற்றில் இந்தியர்களுக்குச் சொந்தமான
இரு வீடுகளின் கூரைகள் சேதமடைந்தன.
இச்சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு
விரைந்த புக்கிட் மெலாவத்தி தொகுதி ஒருங்கிணைப்பாளர் தீபன்
சுப்பிரமணியம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதோடு
நிவாரண உதவிகள் கிடைப்பதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்வதாக
வாக்குறுதியளித்தார்.
இந்த இயற்கைப் பேரிடரின் போது அங்குள்ள ஒரு வீட்டின் அண்டை
வீட்டின் மீது விழுந்ததால் அந்த வீட்டின் கூரையும் சேதமடைந்ததாக
தீபன் கூறினார். இச்சம்பவத்தின் போது வீட்டிலிருந்த இரு மூதாட்டிகள்
தெய்வாதீனமாக காயமன்றித் தப்பியதாக அவர் தெரிவித்தார்.
நாங்கள் சம்பவ இடத்திற்கு சென்ற போது வீட்டின் வீட்டின்
உரிமையாளர்கள் பழுதடைந்த கூரைகளைச் சரி செய்து விட்டனர். மாநில
அரசின் பேரிடர் நிதி மற்றும் தொகுதி நிவாரண உதவியைப் பெறுவதற்கு
ஏதுவாக இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யும்படி சம்பந்தப்பட்ட
குடியிருப்பாளர்களை தாம் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.


