SELANGOR

16 போதைப்பொருள் மற்றும்  குற்றவியல் பதிவுகளை கொண்ட நபர் துப்பாக்கி சூட்டில்  பலி

31 ஆகஸ்ட் 2024, 4:40 AM
16 போதைப்பொருள் மற்றும்  குற்றவியல் பதிவுகளை கொண்ட நபர் துப்பாக்கி சூட்டில்  பலி

கோலாலம்பூர், ஆகஸ்ட் 31: ஜாலான் புக்கிட் பெருந்தோங், ரவாங் என்ற இடத்தில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் குற்றவாளி  ஒருவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான், இரவு 9.33 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், 36 வயதான உள்ளூர் நபர்,  தனது வாகனத்தை நிறுத்த மறுத்து காவல்துறை மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால், போலீசார் சுட்டுக் கொன்றனர்.

"சந்தேக நபரிடம் 16 குற்றவியல் மற்றும் போதைப்பொருள் பதிவுகள் உள்ளன" என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 307 மற்றும் துப்பாக்கிச் சட்டம் 1960 இன் பிரிவு 8 இன் படி விசாரணை நடத்தப் பட்டதாக ஹுசைன் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.