SELANGOR

ஒவ்வொரு கிலோ நகர மீன்களுக்கும் (பிளேகோ) RM1 ஊக்கத் தொகையாக வழங்கப்படும்

30 ஆகஸ்ட் 2024, 10:26 AM
ஒவ்வொரு கிலோ நகர மீன்களுக்கும் (பிளேகோ) RM1 ஊக்கத் தொகையாக வழங்கப்படும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 30: செப்டம்பர் மாதம் முழுவதும் டேனாய் சுங்கை கெபங்சான், சுங்கை லங்காட்டில் பிடிப்படும் ஒவ்வொரு கிலோ நகர மீன்களுக்கும் (பிளேகோ) RM1 ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

பங்கேற்பாளர்கள் நியமிக்கப்பட்ட செயலகப் பகுதிகளில் மட்டுமே மீன் பிடிக்க அனுமதிக்கப் படுவதாகவும், நிகழ்ச்சியின் போது அடையாள அட்டைகளைக் கொண்டு வர வேண்டும் என்றும் உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் அசிம் கூறினார்.

இந்த நிகழ்வு செப்டம்பர் முழுவதும் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் அதாவது 1, 7, 8, 14, 15, 21, 22, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் என்றார்.

"பங்கேற்பாளர்கள் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசிய குடிமக்களாக இருக்க வேண்டும். அவர்கள் காலை 8 முதல் 10 மணி வரை பதிவு செய்யும் நேரத்திற்கு இணங்கி, தங்கள் சொந்த உபகரணங்களை கொண்டு வர வேண்டும்.

"பங்கேற்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார அபாயங்களுக்கு செயலகம் பொறுப்பேற்காது" என்று அவர் முகநூல் மூலம் கூறினார்.

இந்த நடவடிக்கையானது மாநிலத்தில் உள்ள நதி சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் உள்ளூர் மீன்களின் நிலைத்தன்மையை பராமரிப்பதில் மாநில அரசின் முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு ஆகும்.

மேல் தகவலுக்கு 011-1500 2708 (ஹாசிக்) மற்றும் 012-911 2194 (அம்லி) தொடர்பு கொள்ளவும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.