SELANGOR

வாகன நிறுத்துமிட அபராதத் தொகையாக RM10 மட்டுமே வசூலிக்கப்படும் – எம்பிகேஎஸ்

26 ஆகஸ்ட் 2024, 2:40 AM
வாகன நிறுத்துமிட அபராதத் தொகையாக RM10 மட்டுமே வசூலிக்கப்படும் – எம்பிகேஎஸ்

ஷா ஆலம், ஆகஸ்ட் 26: ஆகஸ்ட் 31 வரை வாகன நிறுத்துமிட அபராதத் தொகையாக RM10 மட்டுமே வசூலிக்கப்படும் என கோலா சிலாங்கூர் நகராண்மை கழகம் தெரிவித்துள்ளது.

வாகன நிறுத்துமிட அபராதத் தொகையை செலுத்தத் தவறிய குற்றத்திற்கான கட்டணத்தை குறைக்கும் பிரச்சாரம் ஆகஸ்ட் 10ஆம் தேதி தொடங்கியது என எம்பிகேஎஸ் முகநூல் மூலம் தெரிவித்தது.

“இந்த அபராதத் தொகையை எம்பிகேஎஸ் தலைமையகத்தில் உள்ள கட்டண கவுண்டர், எம்பிகேஎஸ் கட்டண கியோஸ்க் மற்றும் ஸ்மார்ட்போன் செயலி மூலம் மட்டுமே பயனர்கள் செலுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், அபராதச் சரிபார்ப்பு மற்றும் கட்டணத்தை செலுத்த பயனர்கள் ஃப்ளெக்ஸி பார்க்கிங் (FP) மற்றும் ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங் (SSP) செயலிகளைப் பயன்படுத்தலாம்.

கூடுதல் தகவலுக்கு எம்பிகேஎஸ் சட்டப் பிரிவை 03-3289 7385 நீட்டிப்பு 30/31/32 அல்லது http://www.mpks.gov.my என்ற இணையதளத்தில் தொடர்பு கொள்ளவும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.