SELANGOR

தேசிய தினத்தை முன்னிட்டு  செந்தோசா தொகுதியில் தேசியக் கொடிகள் விநியோகம்

19 ஆகஸ்ட் 2024, 3:49 AM
தேசிய தினத்தை முன்னிட்டு  செந்தோசா தொகுதியில் தேசியக் கொடிகள் விநியோகம்
தேசிய தினத்தை முன்னிட்டு  செந்தோசா தொகுதியில் தேசியக் கொடிகள் விநியோகம்

கிள்ளான், ஆக. 19 - மலேசிய தினம் மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடிகளை வழங்கும் இயக்கத்தை செந்தோசா சட்டமன்றத் தொகுதி மேற்கொண்டது.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகளோடு பொதுமக்களிடமும்   கொடிகள் வழங்கப்பட்டன.

தேசிய தினம் மற்றும் மலேசிய தினத்தின் மகத்துவத்தைப் போற்றும் வகையில் அனைத்து மலேசியர்களும் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும் என்று குணராஜ் வலியுறுத்தினார்.

ஆகஸ்ட் 31ஆம் தேதி சுதந்திர தினத்தையும் செப்டம்பர் 16ஆம் தேதி மலேசிய தினத்தையும் நாம் கொண்டாட உள்ளோம். இவ்விரு கொண்டாட்டங்களை முன்னிட்டு நாட்டு மக்களாகிய நாம் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும். இதன் மூலம் நமது தேசப் பற்றை வெளிப்படுத்துவோம் என அவர் தெரிவித்தார்.

இந் நோக்கத்தின் அடிப்படையில் செந்தோசா மக்களுக்கு தேசியக் கொடிகள் வழங்கப்பட்டதாகக் கூறிய அவர்,  தொகுதி மக்கள் அனைவரும் தேசியக் கொடியை பரவலாகப் பறக்க விடுவார்கள் என தாம் நம்புவதாகக் குறிப்பிட்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.