SELANGOR

சுபாங் ஜெயா டத்தோ பண்டாராக அமிருள் அஸிசான் நியமனம்

22 ஜூலை 2024, 9:33 AM
சுபாங் ஜெயா டத்தோ பண்டாராக அமிருள் அஸிசான் நியமனம்

ஷா ஆலம், ஜூலை 22 - முன்னாள் கோலா லங்காட் நகராண்மைக் கழகத் தலைவர்  டத்தோ அமிருள் அஸிசான் அப்துல் ரஹீம் சுபாங் ஜெயா டத்தோ பண்டாராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம்  இன்று  முதல் அமலுக்கு வருகிறது.

இதற்கான பதவி நியமனக் கடிதத்தை மாநில அரசு செயலாளர் டத்தோ ஹாரிஸ் காசிம் அமிருளிடம் வழங்கியதாக சிலாங்கூர் மாநில அரசு செயலகம் தனது முகநூல் பதிவில் தெரிவித்தது.

இந்த நியமன  கடித ஒப்படைப்பு நிகழ்வில்   மாநில  துணை அரசு செயலாளர் (நிர்வாகம்) டத்தோ முகமட் யாசிட் சாய்ரியும் கலந்து கொண்டார்.

இதனிடையே, அமிருளின் நியமனத்தை தாங்கள் பெரிதும்  வரவேற்பதாக  சுபாங் ஜெயா  மாநகர் மன்றம்  முகநூல் பதிவில்  குறிப்பிட்டுள்ளது. மேலும் அவரது தலைமை மூலம் அந்த ஊராட்சி மன்றம் மேலும் பலம் பெறும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்தது.

மாநகர் சமூகத்திற்கு மேலும்  சிறந்த சேவையை வழங்குவதற்கு ஏதுவாக  புதிய டத்தோ பண்டார் மாநகர் மன்ற நிர்வாக இயந்திரத்தை மேலும் வலுப்படுவார் எனத் தாங்கள் நம்புவதாகவும் அது  குறிப்பிட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.