SELANGOR

ஜூலை 17ஆம் நாள் ஜாப் கேர் கார்னிவல் பெட்டாலிங் ஜெயாவில் ஏற்பாடு

13 ஜூலை 2024, 5:04 AM
ஜூலை 17ஆம் நாள் ஜாப் கேர் கார்னிவல் பெட்டாலிங் ஜெயாவில் ஏற்பாடு

ஷா ஆலம், ஜூலை 13: ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் சிலாங்கூர் ஜாப்கேர் கார்னிவலில் மொத்தம் 24 நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.

சமூக பாதுகாப்பு அமைப்பின் (சொக்சோ) இணைந்து நடத்தும் நிகழ்ச்சி ஹோரிசோன் பேங்க்வெட் ஹால், நிலை 3A மெனாரா பிஏசி, பெட்டாலிங் ஜெயாவில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என மனிதவள ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு தெரிவித்தார்.

"இந்நிகழ்வில் ஜெயா குரோசர், 99 ஸ்பீட் மார்ட், போஸ் மலேசியா பெர்ஹாட், கன்சோர்டியம் லெபோராயா உத்தாரா-திமோர், ரூமா ஹோம், மேக்சிஸ் நியாகா மற்றும் பல நிறுவனங்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://bit.ly/JobcarePJ என்ற இணைப்பின் மூலம் வருகையை உறுதிப்படுத்த பதிவு படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்," என்று அவர் முகநூலில் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் கோவிட்-19 தொற்றுநோயால் தங்கள் வருமானத்தை இழந்த நபர்களுக்கு உதவ சிலாங்கூர் அரசாங்கத்தின் முன் முயற்சியாகும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.