SELANGOR

நீர் விநியோக துண்டிப்பதற்கான நோட்டிஸை ஆயர் சிலாங்கூர் வெளியிட்டது

13 ஜூலை 2024, 4:25 AM
நீர் விநியோக துண்டிப்பதற்கான நோட்டிஸை ஆயர் சிலாங்கூர் வெளியிட்டது

ஷா ஆலம், ஜூலை 13: சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நீர் விநியோக துண்டிப்பதற்கான சிவப்பு அறிவிப்பை,   தனது என்பதை ஆயர் சிலாங்கூர் நிறுவனம் உறுதிப்படுத்தியது.

இந்த நீர் விநியோக துண்டிப்பிற்கான சிவப்பு  அறிவிப்பு  நிலுவைத் தொகை இல்லாத தரப்பினர் எவரும் பெற்றிருந்தால் உடனே தொடர்பு கொள்ளுமாறு ஆயர் சிலாங்கூர் முகநூலில் தெரிவித்தது.

"நிலுவை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு நீர் துண்டிப்பதற்கான சிவப்பு  அறிவிப்பு  தங்களால் அனுப்பப்படுகிறது என்பதை ஆயர் சிலாங்கூர்  உறுதி படுத்தியது.

அந்நிறுவனத்தை 15300 என்ற எண்ணில், http://www.airselangor.com இணையத்தளம் மற்றும் ஆயர் சிலாங்கூர் செயலி மூலம் தொடர்பு கொள்ளவும் என வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

முன்னதாக, ஆயர் சிலாங்கூர் லோகோ மற்றும் QR குறியீடு கொண்டிருந்த சிவப்பு நிற 'தண்ணீர் விநியோகம் துண்டிப்பு' என்ற லேபிள் நோட்டீஸ் வைரலானது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.