SELANGOR

புக்கிட் நானாஸ் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தற்காலிகப் பணி நிறுத்ததால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை சீரடைந்தது

24 ஜூன் 2024, 5:35 AM
புக்கிட் நானாஸ் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தற்காலிகப் பணி நிறுத்ததால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை சீரடைந்தது

ஷா ஆலம், ஜூன் 24 : தற்காலிகமாகப் பணிகள் நிறுத்தப்பட்டதால்  நீர் விநியோகத் தடை ஏற்பட்ட, புக்கிட் நானாஸ் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் (எல்ஆர்ஏ)  பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு 12.00 மணியளவில் நீர் விநியோகத்தை  முழுமையாக பெற்றன.

திட்டமிடப்படாத நீர் விநியாக தடை ஏற்பட்ட காலம் முழுவதும் பொறுமை மற்றும் ஒத்துழைப்பு வழங்கியப் பயனர்களுக்கு ஆயர் சிலாங்கூர் நன்றி தெரிவித்தது.

ஆயர் சிலாங்கூர் செயலி, முகநூல், இண்ஸ்டாகிராம் மற்றும் X பக்கம் மூலம் பயனர்கள் கூடுதல் தகவல்களைப் பெறலாம் அல்லது 15300 வழி ஆயர் சிலாங்கூரைத் தொடர்புகொள்ளலாம். மேலும், https://www.airselangor.com/ இணையத்தளத்தை பார்வையிட்டு புதிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

முன்னதாக, ஜூன் 21 அன்று புக்கிட் நானாஸ் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நீரின் நிறம் மாறுபட்டதன் காரணமாக தற்காலிகப் பணி நிறுத்தம் ஏற்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.