SELANGOR

பெட்டாலிங் ஜெயா குழந்தை நட்பு நகர செயல் திட்டம் (PJ CFI) 2030 அறிமுகம்

4 ஜூன் 2024, 10:12 AM
பெட்டாலிங் ஜெயா குழந்தை நட்பு நகர செயல் திட்டம் (PJ CFI) 2030 அறிமுகம்

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 4: பெட்டாலிங் ஜெயா குழந்தை நட்பு நகர செயல் திட்டம் (PJ CFI) 2030ஐ பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி இன்று அறிமுகப்படுத்தியது.

இத்திட்டம் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான, வளமான, நட்புரீதியான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய சூழலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அதன் மேயர் முகமட் ஜாஹ்ரி சமிங்கோன் கூறினார்.

"நகர்ப்புற திட்டமிடல், குழந்தைகள் ஈடுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் நலன்புரி ஆகிய நான்கு முக்கிய அமசங்களை மையமாகக் கொண்டு இந்த திட்டம் வரையப்பட்டது.

"நகரத்தின் திட்டமிடல் மற்றும் மேலாண்மை செயல்பாட்டில் குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதையும் இது வெளிப்படுத்துகிறது," என்று அவர் கூறினார்.

முதல் சிலாங்கூர் திட்டத்தின் (RS-1) இலக்குகள் மற்றும் சமூக நல்வாழ்வு ஆகியவற்றை அடைய இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது என்று முகமட் ஜாஹ்ரி மேலும் கூறினார்.

இத்திட்டம் குழந்தைகளின் திறனை மேம்படுத்தோடு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்," என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.