பெட்டாலிங் ஜெயா, ஜூன் 4- மாநில அரசின் ஏஹ்சான் ரஹ்மா விற்பனைத் திட்டத்தின் வாயிலாக ஸ்ரீ செத்தியா தொகுதியைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பலன் பெற்றுள்ளனர்.
சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தால் (பி.கே.பி.எஸ்.) செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மூன்றுக்கும் அதிகமான தடவை இத்தொகுதியில், குறிப்பாகக் குறைந்த வருமானம் உள்ள பகுதிகளில் ஏற்பாடு இந்த விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.
சுபாங் அரச மலேசிய ஆகாயப்படை தளத்திற்கு அருகில் உள்ள பகுதியில் இந்த விற்பனை நடத்தப்பட்டது. இராணுவ வீரர்களின் குடும்பங்களும் பயன்பெறும் வகையில் இந்த விற்பனை முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டது என தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முகமது ஃபாஹ்மி ங்கா குறிப்பிட்டார்.
மாநில அரசின் திட்டங்களில் மக்கள் பங்கேற்று பயன் பெறுவதை உறுதி செய்வதற்காக இந்த ஆண்டு ஸ்ரீ செத்தியா தொகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல மலிவு விற்பனைத் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று கூறினார்.
நகராண்மைக் கழக உறுப்பினர் சேவை மையம் அமைந்துள்ள சுங்கைவே, ஜாலான் எஸ்எஸ்9/10 எனும் முகவரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 500 கோழிகள், 300 தட்டு முட்டைகள், 300 பாக்கெட் இறைச்சி 300 மூட்டை 5 கிலோ அரிசி, 200 பாக்கெட் மீன், ஐம்பது போத்தல் 5 கிலோ எண்ணெய் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டன. வழங
இதனிடையே, இங்கு விற்கப்படும் பொருட்கள் நல்ல தரத்துடன் இருப்பதுடன் வெளி சந்தைகளை விட மலிவாக உள்ளதால் இந்த விற்பனை அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என்று விற்பனையில் கலந்து கொண்ட மாரேன் சான் (வயது 70) கூறினார்.
என்னால் நிறைய சேமிக்க முடிகிறது. நாங்கள் பணி ஓய்வு பெற்றவர்கள் என்பதால் எனக்கும் எனது கணவருக்கும் நிலையான வருமானம் இல்லை. எனவே நாங்கள் இங்கு செலவுகளை மிச்சப்படுத்தி மற்ற தேவைகளுக்கு அதனைப் பயன்படுத்துகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
தாம் இந்த மலிவு விற்பனைக்கு பலமுறை வந்திருப்பதாகவும் மாதாந்திர சமையல் செலவுகளை மிச்சப்படுத்த முடியும் என்பதால் வெகு தொலைவில் நடைபெறும்
மலிவு விற்பனைக்குச் செல்லவும் தாம் தயாராக இருப்பதாகவும் 44 வயதான வான் யுஸ்னிதா வான் யூசோப் என்ற வர்த்தகர் கூறினார்.


