SELANGOR

தேசிய தாவரவியல் பூங்காவில் நெல் சாகுபடி மற்றும் மீன் வளர்ப்பைப் பற்றி அறிய வாய்ப்பு

27 மே 2024, 2:52 AM
தேசிய தாவரவியல் பூங்காவில் நெல் சாகுபடி மற்றும் மீன் வளர்ப்பைப் பற்றி அறிய வாய்ப்பு

ஷா ஆலம், மே 27: ஜூன் 1 ஆம் தேதி ஷா ஆலம் தேசிய தாவரவியல் பூங்காவில் (டிபிஎன்எஸ்ஏ) நெல் சாகுபடி மற்றும் மீன் வளர்ப்பைப் பற்றி அறிய  பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.

லாமன் பாடியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியில் அனைத்து வயது தரப்பினரும் கலந்து கொள்ளலாம். ஆனால், அவர்கள் ஆரோக்கியமாகவும் எந்தவொரு உடல்நலப் பிரச்சனைகளை இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்று டிபிஎன்எஸ்ஏ தெரிவித்துள்ளது.

“நெல் பயிரிடும் மற்றும் மீன் பிடிக்கும் அனுபவம் பெற வேண்டுமா? ஜூன் 1 அன்று டிபிஎன்எஸ்ஏ ஏற்பாடு செய்துள்ள திட்டத்தில் பங்கேற்போம்” என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டத்திற்கான பங்கேற்பு கட்டணம் பெரியவர்களுக்கு RM20 மற்றும் குழந்தைகளுக்கு RM15 ஆகும்.

கூடுதல் தகவல்களுக்கு 03-55106923 என்ற எண்ணிற்கு அழைக்கவும். பின்வரும் இணைப்பின் மூலம் பதிவு செய்யலாம் https://forms.gle/Kvu5g3rcy6G9w6Fb7.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.