SELANGOR

வீட்டில் பெண்ணின் உடல் கண்டுபிடிப்பு- திடீர் மரணம் என போலீசார் அறிவிப்பு

27 மே 2024, 2:36 AM
வீட்டில் பெண்ணின் உடல் கண்டுபிடிப்பு- திடீர் மரணம் என போலீசார் அறிவிப்பு

புத்ராஜெயா, மே 27- இங்குள்ள தாமான் புத்ரா பெர்டானா சியாந்தான் அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தை திடீர் மரணம் என போலீசார் வகைப்படுத்தியுள்ளனர்.

அந்த 46 வயதுப் பெண் தனியாக வசித்து வந்ததாகக் கூறிய சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஜி. ஷான் கோபால், கடந்த இரு வாரங்களாக அப்பெண் அண்டை வீட்டாரின் கண்களில் படவில்லை என்றும் அவரைத் தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாகவும் சொன்னார்.

சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குற்றவியல் அம்சங்கள் எதுவும் அங்கு காணப்படவில்லை. கடும் நோயினால் அப்பெண் உயிரிழந்திருப்பதற்கான சாத்தியம் உள்ளது என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

அப்பெண்ணின் உடல் மீது இன்று பரிசோதனை நடத்தப்படும் எனக் கூறிய அவர், இச்சம்பவம் தொடர்பில் ஆருடங்களை அல்லது பொய்யான தகவல்களைப் பரப்புவதை தவிர்க்குமாறு பொது மக்களை கேட்டுக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.