SELANGOR

சிலாங்கூர் சாரணர் இயக்க உறுப்பினர்களுக்கு சான்றிதழ்- மேன்மை தங்கிய தெங்கு பெர்மைசூரி வழங்கினார்

20 மே 2024, 7:24 AM
சிலாங்கூர் சாரணர் இயக்க உறுப்பினர்களுக்கு சான்றிதழ்- மேன்மை தங்கிய தெங்கு பெர்மைசூரி வழங்கினார்

ஷா ஆலம், மே 20- இன்று நடைபெற்ற மலேசிய சாரணர் இயக்கத்தின் சிலாங்கூர் கிளையின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு க்கு மேன்மை தங்கிய தெங்கு பெர்மைசூரி சிலாங்கூர் தலைமை தாங்கினார்.

பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு தெங்கு பெர்மைசூரி ஹாஜா நோராஷிகின் தலைமை தாங்கினார் என்று தனது பேஸ்புக் பக்கத்தில்  சிலாங்கூர் அரச அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இந் நிகழ்வுக்கு வருகை புரிந்த தெங்கு பெர்மைசூரியை மலேசிய சாரணர் இயக்கத்தின் சிலாங்கூர் மாநிலத் தலைவர் மேதகு தெங்கு புவான் பங்ளிமா ராஜா சிலாங்கூர் தெங்கு இரினா அல்மார்ஹும் துவாங்கு ஜாபர் வரவேற்றார்.

ஆண்டு முழுவதும் மிகச் சிறப்பான முறையில் சேவையாற்றிய சாரணர் இயக்க உறுப்பினர்களுக்கு அந்த இயக்கத்தின் அரச புரவலருமான தெங்கு பெர்மைசூரி சான்றிதழ்களையும் விருதுகளையும் வழங்கினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.