SELANGOR

30 ஊடகவியலாளருக்கு பண்டமாறன் சட்டமன்ற உறுப்பினர் பாராட்டு விருந்து வழங்கினார் 

16 மே 2024, 12:54 PM
30 ஊடகவியலாளருக்கு பண்டமாறன் சட்டமன்ற உறுப்பினர் பாராட்டு விருந்து வழங்கினார் 

கிள்ளான், மே 16: பண்ட மாறன் மாநில சட்டமன்ற சேவை மையம் நேற்று ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் சுமார் 30 ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

சமூகத்திற்குத் தகவல்களை வழங்குவதில் கடுமையாக உழைக்கும் ஊடகவியலாளர்களைப் பாராட்டும் வகையில் இவ்விழா அமைவதாக அதன் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

"இதுவரை சிறந்த கவரேஜ் வழங்க உதவிய எங்கள் மீடியா பார்ட்னர்களை  பாராட்டுவதில்  மகிழ்ச்சியடைகிறேன் என்று  அவர் தெரிவித்தார்.

"இந்த உறவு ஒட்டுமொத்த மக்களின் நலனுக்காக நன்மை செய்வதாக  இருக்கும் என்று நம்புகிறேன்" என இந்த நிகழ்ச்சியில் பேசிய டோனி லியோங் டக் சீ கூறினார்.

தனது தரப்பு மற்றும் ஊடகப் பங்காளிகளுக்கு இடையே ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட உறவையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் முயற்சியாகவும் இத்திட்டம் இருப்பதாக டோனி கூறினார்.

இந்நிகழ்வில் கிள்ளான் மாநகராட்சி உறுப்பினர்கள் மற்றும் கிராம தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.